வாழ்நாள் எல்லாம் நாட்டு மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் வாழ்ந்த சிபிஐ முதுபெரும் தலைவர் நல்லகண்ணு இன்று (பிப்ரவரி 25) காலமானார். அவருக்கு வயது 101
அவர் மறைவெய்தியதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநில செயலாளர் வீரப்பாண்டியன், “வாழ்ந்த காலம் முழுவதும் மக்களுக்காகவே சிந்தித்தவர், மறைந்த பிறகும் தனது உடல் மருத்துவ ஆய்வுக்காகப் பயன்பட வேண்டும் என்று முடிவெடுத்திருப்பது தியாகத்தின் உச்சம். ஒரு கம்யூனிஸ்ட் எப்படி வாழ வேண்டும், எப்படி மறைய வேண்டும் என்பதற்கு அவரே சாட்சி.
மாலை 5 மணிக்கு நல்லகண்ணு உடல் தி.நகர் பாலன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். நாளை பிற்பகல் 3 மணி வரை தலைமை அலுவலகத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து 3.30 மணிக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அவரது விருப்பப்படி மருத்துவ ஆய்வுக்காக சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்படும்” என்று கூறினார்.
இந்தநிலையில் நல்லகண்ணுவின் மகள், பேரனிடம் வாரிசு என்ற முறையில் ஒப்புதல் பெறப்பட்டு உடலை பதப்படுத்தும் பணிகள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது
