“கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் முடிச்சாச்சு… கேட் (GATE) தேர்வும் எழுதியாச்சு… அடுத்து என்ன?” என்று யோசித்துக் கொண்டிருக்கும் பட்டதாரிகளா நீங்கள்? உங்களுக்கான ஒரு சூப்பர் வாய்ப்பு மத்திய அரசிடமிருந்து வந்துள்ளது.
மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் நவரத்னா நிறுவனமான ‘நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்’ (NALCO), 110 கிராஜுவேட் இன்ஜினியர் டிரெய்னி (GET) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. “சம்பளம் சும்மா தாறுமாறா இருக்கும் போலயே!” என்று ஆச்சரியப்பட வைக்கும் இந்த வேலைக்கான முழு விவரம் இதோ!
வேலை விவரம் & காலியிடங்கள்: மொத்தம் 110 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
துறை வாரியான இடங்கள்:
- மெக்கானிக்கல் (Mechanical): 59 இடங்கள்.
- எலக்ட்ரிக்கல் (Electrical): 27 இடங்கள்.
- கெமிக்கல் (Chemical): 24 இடங்கள்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் (Mechanical, Electrical, Chemical) பி.இ (B.E) அல்லது பி.டெக் (B.Tech) முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 65% மதிப்பெண்கள் அவசியம். (SC/ST/PwBD பிரிவினருக்கு 55% போதும்).
- முக்கியமான கண்டிஷன்: நீங்கள் GATE-2025 தேர்வு எழுதியிருக்க வேண்டும். அந்த மதிப்பெண் அடிப்படையில் தான் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் (ஜனவரி 22, 2026 நிலவரப்படி). அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு தெரியுமா? தேர்வு செய்யப்படும் இன்ஜினியர்களுக்கு ஆரம்பமே அமர்க்களம் தான்!
- ஊதிய விகிதம்: மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை.
- இது போக, மத்திய அரசு ஊழியர்களுக்கான இதர படிகள், மருத்துவ வசதி எல்லாம் உண்டு. பயிற்சியின் போதே லட்சங்களில் சம்பளம்!
விண்ணப்பிப்பது எப்படி?
- வெப்சைட்: www.nalcoindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
- கேரியர் பக்கம்: அதில் ‘Careers’ பகுதியில் உள்ள “Recruitment of Graduate Engineer Trainees (GETs) through GATE-2025” என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
- ரிஜிஸ்டர்: உங்கள் கேட் (GATE) பதிவு எண் மற்றும் இதர விவரங்களைக் கொடுத்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.
- கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்குக் கட்டணம் உண்டு (ரூ.500). SC/ST பிரிவினருக்குக் கட்டணம் குறைவு (ரூ.100).
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 22, 2026 (மாலை 5 மணிக்குள்)
கேட் ஸ்கோர் மட்டும் போதாது… இன்டர்வியூல தான் விஷயமே இருக்கு!
- பாண்ட் (Bond) இருக்கு: வேலையில் சேர்ந்த பிறகு குறைந்தது 4 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்று பாண்ட் எழுதித் தர வேண்டியிருக்கும். இடையில் வேலையை விட்டால், அபராதம் கட்ட நேரிடும். அதனால் யோசித்து முடிவெடுங்கள்.
- கேட் மார்க்: கேட் 2025 மதிப்பெண் தான் பிரதானம். அதில் அதிக மார்க் எடுத்திருந்தால், இன்டர்வியூ உங்களுக்கு ஒரு ஃபார்மாலிட்டி (Formality) மாதிரி தான்.
- ஒரிஜினல்ஸ்: இன்டர்வியூ போகும்போது கேட் ஸ்கோர் கார்டு மற்றும் டிகிரி சான்றிதழ் ஒரிஜினல்ஸ் கையில் இருக்க வேண்டும். ஃபைனல் இயர் படிப்பவர்கள், இன்டர்வியூ நேரத்திற்குள் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
ஜனவரி 22ஆம் தேதிக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. சர்வர் பிஸி ஆவதற்குள் இன்றே அப்ளை பண்ணுங்க!
