பாஜக மாநிலத் தலைவராகும் நயினார் நாகேந்திரன்… 3000 பேருக்கு விருந்து…அதிமுக பாணியில் தடபுடல் தயார்!

Published On:

| By Aara

தமிழ்நாடு பாஜகவின் அடுத்த மாநில தலைவர் யார் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. Nainar Nagendran is the BJP state president

இந்த நிலையில் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பத்தை ஏப்ரல் 11ஆம் தேதி பகல் 2 மணி முதல் 4 மணி வரை அளிக்கலாம் என தேர்தல் அதிகாரியான மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி ஏப்ரல் 10 ஆம் தேதி அறிவித்தார்.

இதன்படி 10 வருடங்கள் பாஜக உறுப்பினர்களாக இருப்பவர்களே தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும் எனவும் தகுதி நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் அடுத்த மாநிலத் தலைவர் யார் என்ற குழப்பம் தொடர்ந்தது.

இது குறித்து பாஜக வட்டாரங்களை பேசியபோது, “இப்படி ஒரு அறிவிப்பு வந்து குழப்பத்தை ஏற்படுத்தினாலும், பாஜகவின் அடுத்த தலைவராக தற்போதைய சட்டமன்ற கட்சி தலைவரான நயினார் நாகேந்திரன் தான் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

ஏப்ரல் 11 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விருப்ப மனுக்கள் தரப்பட உள்ளன. இந்த அடிப்படையில் ஏப்ரல் 12ஆம் தேதி சனிக்கிழமை மாநில தலைவருக்கான தேர்தல் சென்னை வானகரத்திலே அமைந்திருக்க கூடிய ஸ்ரீ வாரு கல்யாண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் நயினார் நாகேந்திரன் பாஜகவின் புதிய மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

வழக்கமாக அதிமுகவின் பொதுக்குழு போன்ற நிகழ்ச்சிகள் இந்த மண்டபத்திலேதான் நடைபெறும். அதே பாணியில், அந்த மண்டபத்தில் தமிழக பாஜக தலைவர் தேர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் வானகரத்தில் செய்யத் தொடங்கி விட்டார்கள். சுமார் 3000 பேருக்கு விருந்தோடு இந்த நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து வருகிறார் நயினார் நாகேந்திரன்” என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில். Nainar Nagendran is the BJP state president

முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். ஜெயலலிதாவின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக பணியாற்றியவர் நயினார் நாகேந்திரன் என்பது குறிப்பிடத் தக்கது.

அதிமுகவோடு கூட்டணி அமைப்பதற்கு ஏதுவாக, நயினார் நாகேந்திரன் பாஜகவின் மாநிலத் தலைவராகிறார் என்கிறார்கள் கமலாலய வட்டாரங்களில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share