SIR க்கு எதிரான அனைத்து கட்சி கூட்டத்தில் தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Nayinar Nagendran

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது மட்டும் SIR பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம் என்று!

ADVERTISEMENT

ஜனநாயக தேசத்தில் குடிமக்களின் வாக்குரிமையைக் காக்கும் பொருட்டு பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, ஏதோ அந்நியமானது போல, பிரதானமாகக் காட்சிபடுத்தி, மழைவெள்ள பாதிப்பு, ஊழல், விவசாயிகள் படும் அல்லல் ஆகியவற்றை மறைத்து, குளிர்காய முயற்சிப்பது இனியும் செல்லாது.

திமுகவின் திசைதிருப்பு நாடகத்தை நன்கு அறிந்து, பல கட்சிகள் கூட்டத்தினை புறக்கணித்துள்ள நிலையில், தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.

ADVERTISEMENT

திமுக அரசின் தொடர் திசைதிருப்பு நாடகத்தையும் வெற்று விளம்பரத்தையும் பார்த்துப் பார்த்து சலித்துப்போன தமிழக மக்கள், இந்த SIR எதிர்ப்பு நாடகத்தையும் புறக்கணிப்பர்! ஜனநாயகத்தின் மீது சிறிதும் அக்கறை இருந்தால், முறையாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பதைவிடுத்து, எஞ்சியிருக்கும் நாட்களில் தங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைகளைத் தீருங்கள் முதல்வரே!” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share