இன்சூரன்ஸ் இல்லாத காரில் ஊர்வலம் வந்த வேட்பாளர்… அபராதம் விதித்த போலீசார்!

Published On:

| By Kavi

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச் செல்வி சென்ற ஆடி காருக்கு போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன், பாஜக  சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் செல்வி, அதிமுக சார்பில் ஜெயவர்தன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ADVERTISEMENT

இன்று வரை இந்த தொகுதியில் போட்டியிட 26 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று (மார்ச் 26) நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ் செல்வி, சென்னை மாநகராட்சி தெற்கு வட்டாரத் துணை ஆணையர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வருகைத் தந்தார்.

ADVERTISEMENT

திறந்தவெளி ஆடி ஏ4 காரில் சுமார் 1கிமீ தூரம் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவர் ஆடிக்காரில் வந்தது பல்வேறு தரப்பினரிடமும் கவனத்தை பெற்றது.

ADVERTISEMENT

அதேசமயம் தமிழ்செல்வி வந்த காரின் இன்சூரன்ஸ் கடந்த செப்டம்பர் மாதமே காலாவதியாகிவிட்டதும் தெரியவந்தது.

பொதுவாகவே, வேட்பாளர் வரும் வாகனத்தையும், அவர் சார்ந்த கட்சியை சேர்ந்தவர்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வீடியோ எடுப்பது வழக்கமானது.

அந்த வகையில் தமிழ் செல்வி வந்த ஆடி காரின் விவரங்களை பார்த்த போது, இன்சூரன்ஸ் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. இதனால் அந்த காருக்கு போக்குவரத்து போலீசார் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளனர்.

வணங்காமுடி, பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜெயலலிதாவின் உயிர்போக ஓபிஎஸ் தான் காரணம் – ஆர்.பி.உதயகுமார்

Suriya: வாடிவாசல், வணங்கான் வரிசையில் இணைந்ததா புறநானூறு?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share