மும்பைக்குள் நுழைந்தால் தமது காலை வெட்டுவோம் என உத்தவ் தாக்கரே சிவசேனா விடுத்துள்ள மிரட்டலுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் ஜனவரி 15-ந் தேதி நடைபெறுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவி உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் செய்தார்.
அப்போது, ”மும்பை மகாராஷ்டிராவின் ஒரு பகுதி அல்ல.. மும்பை ஒரு சர்வதேச நகரம்” என அண்ணாமலை பேசினார். இந்த பேச்சுக்கு உத்தவ் தாக்கரே சிவசேனா, ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மும்பையில் நேற்று பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, அண்ணாமலையை ஒருமையிலும் இழிவாகவும் விமர்சித்தார். உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், மும்பை மாநகருக்குள் அண்ணாமலை கால் வைத்தால் காலை வெட்டுவோம் என எழுதியிருந்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை,
- ராஜ்தாக்கரேவின் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்
- தாக்கரே குடும்பத்தினர் ஒரு விவசாயி மகனாகிய என்னை மிரட்டுகின்றனர்
- மும்பைக்கு வரத்தான் போகிறேன்.. முடிந்தால் சிவசேனா கட்சியினர் என் காலை வெட்டிப் பார்க்கட்டும் என கூறியுள்ளார்.
