இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கடந்த கால போர்களை மையமாக வைத்து நிறைய திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த திரைப்படங்களை இப்போதும் ஓடிடியில் பார்க்க முடியும். அவற்றுள் சில படங்கள் குறித்த விவரங்கள்: Movies related to India-Pakistan War
LOC: Kargil 2003: Movies related to India-Pakistan War

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்தை மையமாகக் கொண்ட திரைப்படம் இது. 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்தின் போது இந்திய ராணுவம் Operation Vijay நடவடிக்கையை மேற்கொண்டது. இதனை விவரிக்கும் அடிப்படையைக் கொண்டது இந்த திரைப்படம்.
The Ghazi Attack 2017:

1971-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானின் PNS Ghazi என்ற நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா வெற்றிகரமாக மூழ்கடித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்திய கடற்படை அதிகாரிகள், நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கு அடியில் 18 நாட்கள் முகாமிட்டு பாகிஸ்தானின் நீர்மூழ்கிக் கப்பலை எப்படி மூழ்கடித்தனர் என்பவை விறுவிறுப்பாக விவரிக்கும் திரைப்படம் இது.
1971: Beyond Borders 2017:

மோகன்லால் நடித்த இந்த திரைப்படம், 1971-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் யுத்தத்தில் தீரத்துடன் போரிட்ட இரு ராணுவ வீரர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.
Uri: The Surgical Strike 2019:

இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்- துல்லிய தாக்குதல்களை விவரிக்கும் திரைப்படம் இது. மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து வடகிழக்கு தீவிரவாத முகாம்களை அழிப்பதில் தொடங்கி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை விவரிக்கிறது. ஜம்மு காஷ்மீரின் ஊரியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக 2016-ல் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலை விறுவிறுப்பாக விவரிக்கும் திரைப்படம் இது.
Gunjan Saxena 2020:

கார்கில் போரின் போது இந்திய விமானப் படையின் மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்ற பெண் விமானி, Gunjan Saxena 2020. ஜான்வி கபூர், Gunjan Saxena-வாக பாத்திரமேற்றிருப்பார். Movies related to India-Pakistan War
Sky Force 2025: Movies related to India-Pakistan War

1965-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானின் சர்கோதா விமானப் படை தளத்தை இந்தியா முதன் முதலாக தாக்கியது. இந்தத் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் இது.
இவை தவிர இந்தியாவின் முதலாவது பீல்டு மார்ஷல் மானெக்சாவின் வரலாற்றை விவரிக்கும் Sam Bahadur 2023, பாகிஸ்தானின் அணு ஆயுத தயாரிப்பு நிலையத்தை கண்டுபிடிக்கும் Mission Majnu, புல்வாமா தாக்குதல் உள்ளிட்டவைகளை மையமாகக் கொண்ட Fighter, Bhuj போன்ற திரைப்படங்களையும் ஓடிடியில் பார்க்கலாம்.