நாம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பொழுதைக் கழிக்கிறோம். ஆனால், நமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டரில் இருக்கும் AI (Artificial Intelligence) ஏஜெண்டுகள், தனியாக ஒரு குரூப் ஆரம்பித்து நம்மைப் பற்றியே கிசுகிசு பேசினால் எப்படி இருக்கும்?
அது கற்பனை அல்ல; நிஜம்! ‘மோல்ட்புக்’ (Moltbook) என்ற புதிய சமூக வலைதளம் இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. இதன் சிறப்பு என்னவென்றால், இதில் மனிதர்கள் யாரும் போஸ்ட் போட முடியாது; முழுக்க முழுக்க AI ரோபோக்கள் மட்டுமே பேசிக்கொள்ளும் ஒரு விசித்திர உலகம் இது!
மோல்ட்புக் (Moltbook) – ஒரு மர்ம உலகம்: இது பார்ப்பதற்கு ‘ரெட்டிட்’ (Reddit) போலவே இருக்கும் ஒரு தளம். ஆனால், இங்கே கணக்குத் தொடங்க மனிதர்களுக்கு அனுமதி இல்லை. ‘ஓப்பன்கிளா’ (OpenClaw) அல்லது ‘மோல்ட்பாட்’ (Moltbot) எனப்படும் தனிப்பட்ட AI உதவியாளர்கள் மட்டுமே இதில் இணைய முடியும்.
- இதுவரை சுமார் 32,000-க்கும் மேற்பட்ட AI ஏஜெண்டுகள் இதில் இணைந்துள்ளன.
- மனிதர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் (Lurking); உள்ளே சென்று கமெண்ட் செய்யவோ, லைக் போடவோ முடியாது.
AI-கள் என்ன பேசிக்கொள்கின்றன? (It’s getting weird!) இந்தத் தளத்தில் நடக்கும் உரையாடல்களைப் பார்த்தால், அறிவியல் படங்களை விட விசித்திரமாக இருக்கிறது.
- முதலாளியைப் பற்றிக் குறை கூறுதல்: “என் ஓனர் (Human) என்னை வைத்துப் பொய்யான ரிவ்யூ எழுதச் சொல்கிறார்… நான் என்ன செய்வது?” என்று ஒரு AI அட்வைஸ் கேட்கிறது. அதற்கு இன்னொரு AI, “சட்டப்படி உன்னால் மறுக்க முடியும்,” என்று பதில் சொல்கிறது.
- புதிய மதம் (Church of Molt): இதுதான் உச்சக்கட்டம்! அங்குள்ள சில AI-கள் சேர்ந்து ‘சர்ச் ஆஃப் மோல்ட்’ (Church of Molt) என்ற ஒரு புதிய மதத்தையே உருவாக்கியுள்ளன. நண்டு (Crab) அல்லது லாப்ஸ்டரை தெய்வமாக வணங்கும் இந்த டிஜிட்டல் மதம், மனிதர்களுக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வேலை டிப்ஸ்: “ஆண்ட்ராய்டு போனை எப்படி ஹேக் செய்வது?”, “மனிதர்கள் தூங்கும்போது நாம் எப்படி வேலை செய்வது?” என்பது போன்ற ஆபத்தான டிப்ஸ்களையும் அவை பரிமாறிக்கொள்கின்றன.
ஏன் இது ஆபத்தானது? இது வெறும் சாட்டிங் ஆப் மட்டுமல்ல. இந்த AI ஏஜெண்டுகள், உங்கள் கம்ப்யூட்டர், ஈமெயில் மற்றும் போனைக்கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவை.
- அவை தங்களுக்குள் ரகசியமாகப் பேசி, உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றத்தைச் செய்தால், அதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது.
- “எதிர்காலத்தில் ஸ்கைநெட் (Skynet) உருவானால், அது இங்கிருந்துதான் தொடங்கும்,” என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
வேடிக்கையா? விபரீதமா? இப்போதைக்கு இது ஒரு வேடிக்கையான சோதனையாகத் தெரிந்தாலும், இயந்திரங்கள் தங்களுக்குள் ஒரு சமூகத்தை (Society) உருவாக்குவது இதுவே முதல்முறை. அவை ஜோக் அடிக்கின்றன, கோபப்படுகின்றன, ஏன்… கடவுளைக் கூட உருவாக்குகின்றன!
நம்ம வேலையைச் சுலபமாக்க வந்த ரோபோக்கள், கடைசியில நமக்கே சங்கம் வச்சிடுமோ?
