ஹெல்த் டிப்ஸ்: டீ குடிப்பதற்கான சரியான நேரம் எது?

Published On:

| By Selvam

நம்மில் பலருக்கு டீ, காபி குடிக்காவிட்டால் வேலையே ஓடாது. காலை, மாலை வேளைகளைத் தவிர சிலர் எந்த நேரமும் டீ, காபி அருந்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இன்னும் சிலருக்கோ இரவு தூங்குவதற்கு முன்பும் டீ அருந்தும் பழக்கம் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில்  டீ அருந்துவதற்கான சரியான நேரம் ஏது?

காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். எழுந்தவுடன் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்துதான் டீ அருந்த வேண்டும். வெறும் வயிற்றில் டீ உட்கொள்வது அமில – அடிப்படை சமநிலையை சீர்குலைக்கும். இது அமிலத்தன்மை அல்லது அஜீரணத்தை ஏற்படுத்தலாம். இதனால் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினையும் பசியின்மையும் ஏற்படலாம்.

உணவுடன் டீ அருந்தினால், அது உணவை சுவையற்றதாக மாற்றுவது மட்டுமல்லாமல், உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதையும் பாதிக்கும். இந்த நிலையில், உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு டீ குடிப்பது ஒரு நல்ல வழி.

தூங்கும் முன் டீ அருந்துவதை தவிர்க்கவும். இதனால் தூக்க பிரச்சினைகள் ஏற்படலாம். டீயில் காஃபின் உள்ளடக்கம் உள்ளதால் நீரிழப்புக்கு வழிவகுக்கும், இதன் காரணமாக உடலில் நீர் அளவு குறைவாகும். இது நரம்புத் தளர்ச்சி, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் சோர்வை ஏற்படுத்தும். அதனால்தான் ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் தேநீர் குடிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதை காலை 11 மணி அளவிலும் மாலை 4 மணி அளவிலும் அருந்துவது நல்லது என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: நண்டு மசால்

பரம்பொருளைத் தவிர வேறு சில பொருள்: அப்டேட் குமாரு

விடுதியில் ஃப்ரிட்ஜ் வெடித்து 2 பெண்கள் பலி : செல்லூர் ராஜூ கோரிக்கை!

கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வழக்கு : காவல்துறை மீது நீதிமன்றம் அதிருப்தி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share