மோகன்லால் – மம்முட்டி படத்தின் பெயர் இதுதான்… லீக்கான சஸ்பென்ஸ்!

Published On:

| By uthay Padagalingam

Mohanlal-Mammootty Malayalam Film Name Patriot

’விஸ்வரூபம்’ உள்ளிட்ட சில தமிழ், மலையாளப் படங்களின் படத்தொகுப்பாளராக அறியப்படுபவர் மகேஷ் நாராயணன். அது மட்டுமல்லாமல் டேக் ஆஃப், சி யூ சூன், மாலிக், அறியிப்பு ஆகிய படங்கள் வழியாகக் குறிப்பிடத்தக்க இயக்குனராகவும் மலையாளத்தில் வலம் வருகிறார்.

‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசனை வைத்து தமிழ், இந்தியில் ஒரு படத்தை மகேஷ் நாராயணன் இயக்குவார் என்று செய்திகள் வெளியானாலும், அந்த முயற்சி படப்பிடிப்புத் தளத்தை எட்டவில்லை. Mohanlal-Mammootty Malayalam Film Name Patriot

அதேநேரத்தில் மம்முட்டி, மோகன்லால், குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நயன்தாரா என்று பல நட்சத்திரங்களை ஒன்றிணைத்து ‘ஏஜேஎஃப்சி_எம்எம்எம்என்’ என்ற பெயரில் ஒரு பிரமாண்டமான படத்தை மலையாளத்தில் உருவாக்கத் தொடங்கினார் மகேஷ். பல கட்டங்களாக நடைபெற்றுவரும் அதன் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடந்து வருகிறது. Mohanlal-Mammootty Malayalam Film Name Patriot

ரெஞ்சி பணிக்கர், ராஜீவ் மேனன், டேனிஷ் ஹுசைன், ரேவதி, பிரகாஷ் பெலவாடி என்று புகழ்பெற்ற மலையாளம், தமிழ், இந்தி, கன்னடக் கலைஞர்கள் பலர் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். நம்மூர் மனுஷ் நந்தன் தான் இதற்கு ஒளிப்பதிவாளர். மறைந்த பத்திரிகையாளர் ஞானியின் மகனான இவர் ஏற்கனவே ‘மன்மதன் அம்பு’வுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். Mohanlal-Mammootty Malayalam Film Name Patriot

தற்போது வரை இந்த படத்தின் பெயர் இன்னதென்று படக்குழுவினர் அறிவிக்கவே இல்லை. அதனை மிகப்பெரிய ரகசியமாகக் காத்து வருகின்றனர்.

மிகப்பெரியதாகத் தேக்கி வைத்த அணையை ‘டமார்’ என்று உடைத்தது போல, ஒரு காரியம் சத்தமில்லாமல் நிகழ்ந்திருக்கிறது. இலங்கை சுற்றுலாத் துறையின் சமூக வலைதளப் பக்கமொன்றில், இப்படத்தின் படப்பிடிப்புக்காக வந்த மோகன்லாலை வரவேற்றுப் பதிவு இடப்பட்டிருக்கிறது. அதில் இந்த படத்தின் பெயர் ‘பேட்ரியாட்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பதிவில் ஒரு ஹேஷ்டேக் ஆகவும் அது பயன்படுத்தப்பட்டுள்ளது.

”இது எங்களோட இரண்டாவது ஷெட்யூல். இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது” என்று மோகன்லால் தெரிவித்ததாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’புரொடக்‌ஷன் நம்பர் 1, நம்பர் 2ன்னு பேரு வச்சு, ஒரிஜினல் டைட்டிலை சொல்லாம பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அறிவிப்பையே ஒரு திருவிழா மாதிரி நடத்தி, ஒவ்வொரு ஸ்டாரோட ரசிகர்களையும் குஷிப்படுத்தலாம்னு ப்ளான் பண்ணி வச்சிருந்தா, எல்லாத்தையும் சுக்குநூறா உடைச்சிட்டீங்களே.. எனக்குன்னே வருவீங்களா அப்ரெண்டீஸ்களா’ என்று படக்குழு கதறுகிற தொனியிலான ‘மீம்ஸ்’கள் இதற்கடுத்து வரக்கூடும்..!

Mohanlal-Mammootty Malayalam Film Name Patriot
Mohanlal-Mammootty Malayalam Film Name Patriot
Mohanlal-Mammootty Malayalam Film Name Patriot
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share