நண்பேன்டா… முகமது குட்டி பெயரில் சபரிமலையில் மோகன்லால் சிறப்பு பிரார்த்தனை!

Published On:

| By Kumaresan M

சமீபத்தில் நடிகர் மம்முட்டிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் பரவியது. அவருக்கு புற்று நோய் தாக்கியுள்ளதாகவும் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால்,இந்த தகவலை அவரின் செய்தி தொடர்பாளர்கள் மறுத்திருந்தனர். Mohanlal in sabarmalai temple

இந்த நிலையில், நடிகர் மம்முட்டிக்காக சபரிமலைக்கு விரதம் இருந்து நடிகர் மோகன்லால் சென்று வந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்காக, பம்பை வந்த மோகன்லாலுக்கு தேவசம் போர்டு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

முதலில் பம்பையிலுள்ள கணபதி கோவிலில் வழிபாட்டை நடத்திய பிறகு, அங்கிருந்து சன்னிதானத்துக்கு நடந்து வந்தார். பின்னர், ஐயப்பனை மனமுருகி வழிபட்டார். மேலும், நடிகர் மம்முட்டிக்காகவும் அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார். முகமது குட்டி என்ற மம்முட்டியின் இயற் பெயர் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்தார். Mohanlal in sabarmalai temple

தனது மனைவி சுசித்ரா பெயரிலும் சிறப்பு அர்ச்சனை நடத்தினார். முன்னதாக, மம்முட்டியிடமும் சபரி மலையில் சிறப்பு அர்ச்சனை செய்வது குறித்து மோகன்லால் சொன்னதாக தகவல் வெளியாகின.

நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகிறது. பான் இந்தியா படமான இது தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகிறது. இதன் காரணமாகவும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று மோகன்லால் வழிபட்டதாக தெரிகிறது. இன்று புதன் கிழமை காலையில் ஐயப்பனுக்கு மோகன்லால் நெய்யாபிஷேகம் வழிபாடும் நடத்தினார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு, மோகன்லால் சபரிமலை சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது, மோகலால் நடித்த புலி முருகன் படம் வெளியானது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share