புல்டவுசர் இல்லை… சுத்தியலோடு மோடி: போட்டு உடைத்த ப.சி.

Published On:

| By Aara

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா இன்று (ஏப்ரல் 27)  சென்னையில் நடைபெற்றது. கட்சியின் வழக்கறிஞர் பிரிவு தேசிய செயலாளர் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வுக்கு தலைமை வகித்துப்  பேசிய  முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், Modi’s alternative plan to destroy the Constitution: p.chidambaram warns

“டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை நாம் கொண்டாடுகிறோம். அன்று காங்கிரஸ் கட்சியில் பல சட்ட மேதைகள் இருந்தனர். காந்தி, நேரு, பட்டேல், ராஜாஜி, கே.எம். முன்ஷி எல்லாமே வழக்கறிஞர்கள்தான்.

ஆனால் அவர்களை  அரசியல் சாசன குழுவுக்கு தலைவராக நியமிக்காமல் அம்பேத்கரை தேர்ந்தெடுத்தார்கள் என்றால் காரணமில்லாமல் இல்லை.

அன்று அம்பேத்கர் காங்கிரஸ்  கட்சியின் அதிகாரபூர்வ உறுப்பினர் கூட அல்ல. ஆனால் அம்பேத்கரை தேர்ந்தெடுத்ததால் தான் அரசியல் சாசனம் வந்தது என்று நான் பெருமை கொள்கிறேன்.

ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், தலித் மக்கள், பெண்களுக்கான உரிமைகளை மற்ற நாடுகளில் சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகள் போராடித்தான் வாங்கினார்கள்.

உதாரணமாக பெண்களுக்கு வாக்குரிமை என்பது  அமெரிக்காவிலே, இங்கிலாந்திலே பல ஆண்டுகள் கிடையாது. ஆனால் இந்தியா குடியரசான முதல் நாளே அனைத்து மக்களுக்கும் உரிமை, வாக்குரிமை என்று அரசியல் சாசனத்தில் எழுதியது அண்ணல் அம்பேத்கர்.

அந்த அரசியல் சாசனத்தின் மிக முக்கியமான அம்சம் கூட்டாட்சி.  

தேர்தலுக்கு முன்னாள் 400 இடங்களை பெற போவதாக பாஜக சபதம் எடுத்தது. அந்த சபதம் மட்டும் நிறைவேறியிருந்தால்  அரசியல் சாசனத்தை தகர்த்து எறிந்திருப்பார்கள்.

எப்படி ஆக்கிரமிப்பு என்று புல்டவுசர் கொண்டு இடிக்கிறார்களோ, அதேபோல அரசியல் அமைப்பு சாசனத்தை தகர்த்து எறிந்து… புதிய அரசியல் சாசனத்தை ஒரு வாரத்திலேயே கொண்டு வந்திருப்பார்கள். Modi’s alternative plan to destroy the Constitution: p.chidambaram warns 

ஆனால் இந்திய மக்கள் அவர்களுக்கு 400 இடங்களைத் தர வில்லை. அறுதிப் பெரும்பான்மையை கூட தரவில்லை. 272 க்கு பதிலாக 240 என்பதோடு நிறுத்திவிட்டார்கள்.

மக்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்றிவிட்டதாக நினைக்கலாம்.  ஆனால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின், பாரதிய ஜனதாவின் பிரதமர்  மோடியின் ஆட்சியில் வேறு திட்டத்தை வரையறுத்திருக்கிறார்கள்.

புல்டவுசர் கொண்டுதானே அரசியல் சாசனத்தை தகர்க்க முடியவில்லை. உளி, சுத்தியல் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தகர்க்கிறார்கள். அதனால்தான் கொஞ்சம் கொஞ்சமாக பல சட்டங்களை கொண்டுவந்து அரசியல் சாசனத்தை  சிதைக்கிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃப் திருத்தச் சட்டம், வரப் போகும் இமிக்ரேஷன் சட்டம் ஆகியவை அரசியல் சாசனத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைப்பவை.Modi’s alternative plan to destroy the Constitution: p.chidambaram warns

புல்டவுசர் வைத்து இடித்தால் எல்லாருக்கும் தெரிந்துவிடும். ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.  ஆனால் கண்ணுக்கு தெரியாமல் அரசியல் சாசனத்தை சிதைக்க நின்று நிதானித்து சட்டங்களை இயற்றி வருகிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுகுறித்தும் நமது வழக்கறிஞர்கள் தனியாக ஒரு கூட்டம் போட வேண்டும்” என்று பேசினார் ப.சிதம்பரம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share