அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
பிரதமர் மோடியை டொனால்ட் டிரம்ப் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் .இதனையடுத்து மோடியுடன் பேசிய விவரங்களை பகிரங்கப்படுத்திய டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இனி இந்தியா வாங்காது; அமெரிக்கா- வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கும். இந்தியா- அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என அறிவித்திருந்தார்.
பிரதமர் மோடியும், டிரம்ப்பிடம் பேசியதாகவும் இந்திய பொருட்களுக்கான வரியை 25%-ல் இருந்து 18% குறைப்பதாக டிரம்ப் உறுதி அளித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், டிரம்ப்பிடம் மோடி சரணடைந்துவிட்டதைத்தான் இது காட்டுகிறது. இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை தன்னிச்சையாகவே டிரம்ப் அறிவிக்கிறார். அந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களும் வெளியாகவும் இல்லை என விமர்சித்துள்ளார்.
