காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது 55-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை ஒட்டி இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். Modi MK Stalin extends birthday
பிரதமர் மோடி
ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்
எனது சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாங்கள் ரத்தத்தல் பிணைக்கப்படாவிட்டாலும் சிந்தனை, தொலைநோக்கு பார்வையால் பிணைக்கப்பட்டுள்ளோம்.

தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே
ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அவருக்கு இனிய ஆண்டாக அமையட்டும்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ்
ராகுல் காந்தி ஆரோக்கியமான, வெற்றிகரமான, மகிழ்ச்சியான, நீண்ட மற்றும் வளமாக இருக்க வாழ்த்துகிறேன். கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் அவர் மீது இருக்கட்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை
எங்கள் அன்புக்குரிய ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வகுப்புவாத மற்றும் மத பாசிசத்திற்கு எதிரான அவரது போராட்டத்திற்கும், நல்லிணக்கம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான அவரது அர்ப்பணிப்புமிக்க பணிக்கும் நாங்கள் அவருடன் துணை நிற்கிறோம்.

விசிக தலைவர் திருமாவளவன்
சனாதன ராஷ்டிராவை அமைக்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளைச் சிதைக்கும் சாதிய – மதவாத சங்பரிவார் சக்திகளை வீழ்த்தும் அறப்போரில் தாங்கள் வெற்றிவாகை பெற வாழ்த்துகிறோம். அந்தக் களத்தில் சிறுத்தைகள் என்றென்றும் துணை நிற்போம்.