ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Modi addresses Rozgar Mela
பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 26) காலை 11 மணியளவில் காணொளி காட்சி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், “இளைஞர்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் தீவிர பங்களிக்கும் போது நாடு விரைவான வளர்ச்சியை அடைந்து உலக அளவில் அங்கீகாரத்தை பெறும். இந்திய இளைஞர்கள் தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் புதுமை மூலம், நம்மிடம் உள்ள மகத்தான ஆற்றலை உலகிற்கு நிரூபித்து வருகின்றனர். Modi addresses Rozgar Mela
இந்த பட்ஜெட்டில், ‘மேக் இன் இந்தியா’ முயற்சியை ஊக்குவிப்பதற்கும், இந்திய இளைஞர்களுக்கு உலகளவில் தரமான தயாரிப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் அரசாங்கம் உற்பத்தி இயக்கத்தை அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் தொடர்ந்து பெருகுவதை உறுதி செய்ய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.Modi addresses Rozgar Mela
ஆட்டோமொபைல் மற்றும் காலணித் தொழில்களில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் புதிய சாதனைகளை எட்டியிருக்கும் நிலையில் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் உயரும்.
ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பும் அதிகரித்திருக்கிறது. யுபிஎஸ்சி தேர்வில் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களில் 3 பேர் பெண்கள். நாடு முழுவதும் சுய உதவிக் குழுக்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பணியாற்றுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில், சென்னை, திருச்சி என பல்வேறு இடங்களில் இருந்து கலந்துகொண்டு காணொளி வாயிலாக இளைஞர்கள் பணி நியமன ஆணைகளை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. Modi addresses Rozgar Mela