தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!

Published On:

| By Mathi

Model Code of Conduct

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று மார்ச் 15-ந் தேதி அறிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை ஞானேஷ்குஅமர் அறிவித்தார்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.

அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் 9-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறும்.

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29-ந் தேதி என 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும்.

அனைத்து மாநிலங்களிலும் மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ADVERTISEMENT

5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தேர்தல் நடத்தை விதிகள் என்ன? முழு விவரம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share