ADVERTISEMENT

கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு நன்றி : ஸ்டாலின்

Published On:

| By Kavi

‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற திமுகவின் உறுதி ஏற்பு கூட்டங்களில் பல ஆயிரம் பேர் கலந்துகொண்டதற்கு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

ADVERTISEMENT

இந்தநிலையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை தொடர்ந்து தற்போது ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற உறுதிமொழியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுள்ளார்.

கடந்த செப்டம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் திருவாரூர், திருச்சி, கோவை, கரூர் என பல்வேறு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மா.செ.க்கள் தலைமையில் திமுகவினர் உறுதிமொழி கூட்டங்களில் கலந்துகொண்டு,

ADVERTISEMENT

‘தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்.

வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் SIR-க்கு எதிராக நிற்பேன்.

ADVERTISEMENT

நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன்.

மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்.

தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன்.

‘பெண்கள் – விவசாயிகள் – மீனவர்கள் – நெசவாளர்கள் தொழிலாளர்கள்’ என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்’ என உறுதி மொழி ஏற்றனர்.

அப்போது திருச்சி, திருவாரூர், விருதுநகர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் என பல்வேறு மாவட்டங்களிலும் அதிகளவிலான கூட்டம் கூடியுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்களை இன்று (செப்டம்பர் 22) தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து திமுகவினருக்கு ஸ்டாலின் நன்றி கூறியுள்ளார்.

“கடந்த இரு நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கழக மாவட்டங்களிலும், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க – கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் திருச்சி, திருவாரூர் பிரச்சாரத்தின் போது அதிகளவிலான மக்களும் தவெக தொண்டர்களும் கூடினர். இதற்கு கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என்று அரசியல் கட்சிகள் விமர்சித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share