வளர்ச்சியைப் பரவலாக்கி மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம் – மு.க.ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

DMK MK Stalin

கணினித் துறையில் திமுக அரசின் சாதனைகளை சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் வளர்ச்சியைப் பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும், அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம் என் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 12) தனது எக்ஸ் பதிவில், “திராவிட மாடலில் உருவான 2 TIDEL Park மற்றும் 16 Neo TIDEL Park!

ADVERTISEMENT

கணினித் துறையில் தமிழ்நாடு உயர்ந்திடத் தலைவர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் உருவானவை டைடல் பூங்காக்கள்.

கடந்த 2016-21 அ.தி.மு.க. ஆட்சியின் இறுதிக்காலத்தில் ஒரே ஒரு டைடல் பூங்காவுக்கு மட்டுமே அடிக்கல் நாட்டினர்.

ADVERTISEMENT

நமது திராவிட மாடல் ஆட்சியில், அவர்கள் அடிக்கல் நாட்டிய பட்டாபிராம் டைடல் பூங்காவை விரைந்து முடித்துத் திறந்தது மட்டுமல்ல,

விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய ஏழு இடங்களில், சுமார் 4,200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் Neo TIDEL Park-களை நிறுவித் திறந்து வைத்துள்ளோம்.

ADVERTISEMENT

இதுமட்டுமின்றி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில், சுமார் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் TIDEL Park-களும், திருவண்ணாமலை, இராசிபுரம், நாகர்கோயில், திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஒன்பது இடங்களில், சுமார் 5,400 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் NeoTIDELPark-உம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

வளர்ச்சியைப் பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும் – அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்! மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம்! வெல்வோம் ஒன்றாக!” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share