தட்டுப்பாடு அச்சம்: பெட்ரோல் பங்குகளில் அலைமோதிய பொதுமக்கள்- நீண்ட வரிசைகளில் காத்திருப்பு!

Published On:

| By Mathi

Petrol Pumps

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அச்சம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

ஈரான் மீதான அமெரிக்கா- இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து ஹோர்முஸ் ஜலசந்தியை இழுத்து மூடியது ஈரான். உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஹோர்முஸ் ஜலசந்திதான் மிக முக்கியமானது. இந்த ஜலசந்தி மூடப்பட்டுவிட்டதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான கச்சா எண்ணெய் கப்பல்கள் வரத்து பாதிக்கப்பட்டுவிட்டது.

ADVERTISEMENT

இதனால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்காததால் நாட்டின் பல பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அச்சம் காரணமாக பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசைகளில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். சிலர் வாட்டர் கேன்கள், பக்கெட்டுகளிலும் பெட்ரோல், டீசல் வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share