குஜராத்தை தொடர்ந்து அசாமிலும் நிலநடுக்கம்!

Published On:

| By christopher

அசாம் மாநிலத்தில் 4.0 ரிக்டர் அளவுகோலில் இன்று (பிப்ரவரி 12) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் இன்று மாலை 4.18 மணிக்கு 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அசாமில் உள்ள நாகோன் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துருக்கியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியாவிலும் அதற்கான வாய்ப்புள்ளதாக சர்வதேச புவியியல் ஆய்வாளர்கள் கணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, இன்று அசாமிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

ஆர்.எஸ்.எஸ். பேரணி : தமிழ்நாடு அரசுக்கு சிபிஎம் முக்கிய கோரிக்கை!

ADVERTISEMENT

விபத்தில் சிக்கிய எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் கார்!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share