சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. அரசு விடுமுறை என்பதால் சென்னைவாசிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதையொட்டி சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் சென்னை மெட்ரோ சேவையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
விடுமுறை தினம் என்பதால் நாளை ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
பீக் ஹவர்சான மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும்.
கூட்டம் குறைவான நேரங்களில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும்
நீட்டிக்கப்பட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.