ADVERTISEMENT

புதிய வசதி.. UBER App மூலம் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகள்!

Published On:

| By Mathi

Metro Rail Ticket UBER

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ பயணச்சீட்டுகளை தற்போது Uber App மூலம் எளிதாகபெரும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், UBER மற்றும் ONDC நெட்வொர்க் உடன் இணைந்து, UBER செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணத்திற்கான பயணச்சீட்டு பெரும் வசதியை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில் இன்று (07.08.2025) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், இ.ஆ.ப., அறிமுகப்படுத்தினார்.

ADVERTISEMENT

இன்று முதல், சென்னையில் உள்ள UBER பயனாளர்கள், தங்களது மெட்ரோ பயணங்களை திட்டமிடவும், QR அடிப்படையிலான பயணச்சீட்டுகளை பெறவும், நேரடி மெட்ரோ பயண தகவல்களையும் UBER செயலியில் தெரிந்துக்கொள்ளலாம். இதன் அறிமுக சலுகையாக 2025-ல் ஆகஸ்ட் மாதம் முழுவதும் UBER செயலியை பயன்படுத்தி மெட்ரோ பயணச்சீட்டுகளை வாங்கும் பயணிகள் பயணச்சீட்டுகளில் 50% தள்ளுபடியை பெறலாம். இந்த சலுகை UBER செயலியில் மட்டுமே கிடைக்கும். இது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கும் பிற மெட்ரோ பயணச்சீட்டு சேவை தளங்களில் பொருந்தாது.

UBER செயலியைபயன்படுத்தி மெட்ரோ பயணச்சீட்டு பெறுவதற்கு UPI முறையே பயன்படுத்தப்படும். இது டிஜிட்டல் பயன்பாட்டை மேம்படுத்துகிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp – (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share