“ஹோட்டல்ல ஆர்டர் பண்ணவே பயமா?” – ஜென்-ஜி (Gen Z) கிட்ஸை ஆட்டிப்படைக்கும் ‘மெனு ஆங்ஸைட்டி’… இது என்ன புது வியாதி?

Published On:

| By Santhosh Raj Saravanan

menu anxiety gen z decision fatigue fobo phenomenon lifestyle news tamil

நீங்கள் ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறீர்கள். சர்வர் கையில் மெனு கார்டைக் கொடுக்கிறார். அதில் உள்ள நூற்றுக்கணக்கான டிஷ் பெயர்களைப் பார்த்துவிட்டு, எதை ஆர்டர் செய்வது என்று தெரியாமல் 20 நிமிடம் குழம்பிப்போய் அமர்ந்திருக்கிறீர்களா? அல்லது ஸ்விக்கி, ஜொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்ய ஆசைப்பட்டு, அரை மணி நேரம் ஸ்க்ரோல் செய்துவிட்டு, கடைசியில் “போங்கடா நீங்களும் உங்க சாப்பாடும்” என்று ஆப்பையே மூடி இருக்கிறீர்களா?

அப்படி என்றால், உங்களுக்கு இருப்பது மெனு ஆங்ஸைட்டி” (Menu Anxiety).

ADVERTISEMENT

இன்றைய ஜென்-ஜி (Gen Z) தலைமுறையினரை அதிகம் பாதிக்கும் ஒரு விசித்திரமான மனநிலை இது. வெறும் உணவுக்கு மட்டுமல்ல; என்ன படம் பார்ப்பது, எந்த உடையை வாங்குவது, யாரைக் காதலிப்பது என வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் முடிவு எடுக்க முடியாமல் (Decision Paralysis) அவர்கள் திணறி வருகின்றனர்.

ஏன் இந்தத் திணறல்?

இதற்கு முக்கியக் காரணம் “அதிகப்படியான தேர்வுகள்” (Paradox of Choice).

ADVERTISEMENT
  • 90களில் தூர்தர்ஷன் மற்றும் சன் டிவி என இரண்டே சேனல்கள் இருந்தன. எதைப் பார்ப்பது என்ற குழப்பம் இல்லை.
  • ஆனால் இன்று? நெட்ஃப்ளிக்ஸ், பிரைம், ஹாட்ஸ்டார் என ஆயிரம் ஆப்ஷன்கள். எதைப் பார்த்தாலும், “இதைவிட நல்ல படம் இன்னொன்னு இருக்குமோ?” என்ற சந்தேகம் வருகிறது.
  • இதை உளவியலில் FOBO (Fear of Better Options) என்கிறார்கள். அதாவது, “சிறந்ததை இழந்துவிடுவோமோ என்ற பயம்”.
தவறான தேர்வு பயம் (Fear of Wrong Choice):

இன்றைய இளைஞர்களுக்குத் தோல்வி பயம் அதிகம்.

  • “நான் ஆர்டர் பண்ண பிரியாணி நல்லா இல்லன்னா என்ன பண்றது?”
  • “இந்த வெப் சீரிஸ் போர் அடிச்சா என் நேரம் வீணாயிடுமே?”

என்ற பயத்திலேயே அவர்கள் முடிவெடுக்கத் தயங்குகிறார்கள். இதனால் மூளை சோர்வடைந்து ‘டெசிஷன் ஃபெட்டிக்’ (Decision Fatigue) ஏற்படுகிறது.

ADVERTISEMENT

டேட்டிங் முதல் ஷாப்பிங் வரை: இந்த மெனு ஆங்ஸைட்டி உறவுகளையும் பாதிக்கிறது. டேட்டிங் ஆப்களில் (Dating Apps) இருக்கும் ஆயிரக்கணக்கான ப்ரொஃபைல்களைப் பார்த்து, “இவரை விட பெட்டர் பார்ட்னர் கிடைப்பாரோ?” என்று தேடிக்கொண்டே இருப்பதால், யாரையுமே தேர்ந்தெடுக்க முடியாமல் பலர் தனிமையில் வாடுகின்றனர்.

தீர்வு என்ன?

வாழ்க்கையில் “சிறந்த தேர்வு” (Perfect Choice) என்று ஒன்று கிடையாது. “நல்ல தேர்வு” (Good Choice) மட்டுமே உண்டு.

  • ஹோட்டலுக்குச் சென்றால் 2 நிமிடத்திற்கு மேல் யோசிக்காதீர்கள்.
  • மனதிற்குப் பிடித்ததைச் செய்யுங்கள். அது தவறாக இருந்தால் பரவாயில்லை, அதுவும் ஒரு அனுபவம்தான்!

அடுத்த முறை மெனு கார்டைப் பார்த்தா… கண்ணை மூடிட்டு கை வைக்கிறதை ஆர்டர் பண்ணிடுங்க! சாப்பிடுறதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share