இன்னைக்கு மதியம் ரொம்ப பசி… சரி ஒரு புடி புடிக்கலாம்னு ஹோட்டலுக்கு போனேன்…
ரெண்டு செட் நான்… ஒரு பட்டர் சிக்கன்… ஒரு ஆம்லெட்…னு ஆர்டர் பன்னேன்… நான் சொன்னதையே அந்த சர்வர் காதுல வாங்கல…
அவர் பாட்டுக்கு, வடிவேல் காமெடி மாதிரி அண்ணனுக்கு ஒரு புளி சாதம்னு சொல்றாரு…
என்னப்பா நான் இவ்ளோ ஆர்டர் பன்றேன்… நீ புளி சாதம்னு சொல்றனு கேட்டா…
சிலிண்டர் தட்டுப்பாடுங்கிறதால் குறிப்பிட்ட அளவு சமையல் தான் பன்றோம்… இப்பொதைக்கு புளி சாதம்தான் இருக்கு வேணுமா வேணாமானு கேக்குறாரு…
இன்னும் என்னென்ன பார்க்க வேண்டி இருக்கோ…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ArulrajArun
“சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன?” -அன்புமணி
– வேற என்ன நாங்க ஆட்சிக்கு வந்தா வீட்டுக்கு வீடு எலக்ட்ரிக் அடுப்பு (Electric Stove ) தருவோம் ன்னு சொல்ல வேண்டியது தான்…

படிக்காதவன்
காச கூட தாராளமாக செலவு பண்ணுங்க ஆனால்
கேஸ் சிக்கனமா செலவு பண்ணுங்க மக்களே…

caroline
புருஷன் ~ ஈரான் பிரச்சனைய பேசுறா, சிலிண்டர் பிரச்சனைய பேசுறா, அரசியல பத்தி பேசுறா, பக்கத்து வீட்டு சண்டைய பத்தி கூட பேசுறா
ஆனா இப்போ சோத்துக்கு என்னன்னு மட்டும் பேசமாட்டா

ArulrajArun
யானைக்கு ஒரு காலம் வந்தா
பூனைக்கு ஒரு காலம் வரும்’னு சொன்னமாதிரி
கேஸ் அடுப்பு க்கு ஒரு காலம் வந்த மாதிரி
இப்ப திரும்ப விறகு அடுப்பு க்கு வந்துருக்கு..

.
Palanivel Rajan
விறகு அடுப்பு To கேஸ் அடுப்பு To விறகு அடுப்பு….
வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை புரிய வைத்தது….

balebalu
கேஸ் சிலிண்டர் கிடைக்கல்ல
சமைக்க முடியல்ல
ஹோட்டல் எல்லாம் மூடிட்டு வர்றாங்க ன்னு உனக்கு கவலை
இன்னும் கை தட்டுங்க
விளக்கு ஏத்துங்க ன்னு அறிவிப்பு வரல்லையே ன்னு எனக்கு சந்தோசம்

படிக்காதவன்
லேப்டாப் விலை உயரும் அபாயம்
35% வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் – செய்தி
ஒருவேளை இதுவும் கேஸ் சிலிண்டர் மாதிரி தட்டுபாடா இருக்குமோ…

கோழியின் கிறுக்கல்!!
ஒரு புது கார் வாங்கணும்னு முடிவு பண்ணினா,
நாலு பேர் கிட்ட ஆலோசனை கேளுங்க!!
அவங்க நம்ம போட்டு குழப்புறதில நாம வண்டியே வாங்காம கடன்ல இருந்து தப்பிச்சுக்கலாம்!!

லாக் ஆஃப்
