இன்னிக்கு ஆபிஸ் முடிச்சிட்டு வீட்டுக்கு போனேன். அக்கா கைல குச்சி வச்சிகிட்டு பையன திட்டிகிட்டு இருந்தாங்க…
ஏன் கா, ஹோம் வொர்க் பன்னலனு திட்ரீங்கலானு கேட்டேன்… இல்லனு சொன்னாங்க…
பிறகு எதுக்கு மிரட்டுரிங்கனு கேட்டேன்…
ஸ்கூல் முடிச்சிட்டு வந்ததும் படிக்க வேண்டியதானே… படிச்சாதானே பெரிய ஆளா வர முடியும்னு பாசமாதான் சொன்னேன். அதுக்கு அவன் படிக்கலனு சொன்னா கூட பரவாயில்லை… என்ன சொன்னானு அவன்கிட்டையே கேளுனு சொன்னாங்க…
சரினு குட்டி பையன்கிட்டைடே கேட்டேன்… என்னடா சொன்னனு…
அவ்வளவு பெரிய ஆளுநரே படிக்கமா போறாரு… நீங்க மட்டும் என்னை படிக்க சொல்றீங்கனு கேட்டேனு சொல்றான்…
அட பாவி, உன்ன அடிக்கிறதுல தப்பே இல்லனு சொல்லிட்டு வெளிய கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ArulrajArun
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை!
பாமர மக்கள்; அவன நிறுத்த சொல்லுங்கடா” யாராச்சும் அவன நிறுத்த சொல்லுங்கடா,..

balebalu
குரங்கின் பரிணாம வளர்ச்சி மனிதன் –
சாதாரண நேரத்தில்
மனிதனின் பரிணாம வளர்ச்சி குரங்கு –
தேர்தல் கூட்டணி நேரத்தில்

ArulrajArun
கூட்டணி தொடர்பாக தொலைபேசியில் கூட யாரும் தொடர்பு கொள்ளவில்லை” -பிரேமலதா விஜயகாந்த்
-மேடம் நீங்க தொடர்பு எல்லைக்கு வெளிய இருக்கீங்க மேடம்

ச ப் பா ணி
உண்மையிலேயே வாழ்க்கையில் அதிக மேடு பள்ளங்களை பார்த்தவர்கள் ஓட்டுநர்களே

mohanram.ko
டூ மேனேஜர் -சண்டே லீவு தான்… ஆனா அந்த நாள் கூட உங்ககிட்ட கேட்டு தான் லீவு எடுக்க வேண்டியிருக்கு…

Bo Suzuki
~ ஹலோ, மரியாதையா பேசுங்க, நான் இப்போ அரசாங்க ஊழியர்.
~ ஸ்கூல் பக்கமே போகாத நீ எப்படிடா வேலைக்கு சேர்ந்த?
~ தேர்தல் சமயத்துல 4 மாடு புடிச்சி, வேலை வாங்கிட்டேன்ல.

Mannar & company
டெல்லியைத் தாண்டி
அரசியல் செய்யலாம்,
ஆனா
டெல்லியைத் தவிர்த்து
ஆட்சி செய்ய முடியாது!

கோவிந்தராஜ்
வைத்தியலிங்கம் டா
தினகரன் டா
சிபிஐ டா

Writer SJB
ஜனநாயகன் படத்துக்கு எப்போ சென்சார் சர்டிபிகேட் தருவீங்க?
பொறப்பா தருவோம்,,
ஐ அம் வெயிட்டிங்..!

லாக் ஆஃப்
