ADVERTISEMENT

“கரும்பு தின்ன கூலி”: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ச ப் பா ணி

ADVERTISEMENT

தை பிறந்தால் வழி பிறக்கும்
Genz kids: கூகுள் மேப் ஆன் செய்தால் தானே வழி பிறக்கும்

பரமசிவம் ராமசாமி

ADVERTISEMENT

எவனோ பொங்கலுக்கு
வீட்டககழுவி பொருட்களை
ஒதுங்க வைக்க
சங்கடப்பட்டவன் தான்…..

போகிய கண்டுபிடிச்சு அம்புட்டையும் கொழுத்தி விட்ருக்கான்…….!!!!

ADVERTISEMENT

டிங் டாங்

விலை பார்த்து வாங்கும் வாழ்க்கையிலிருந்து
விடுபடத்தான்
விரும்புகிறோம்

Sasikumar J

தீபாவளிக்கு எப்படி வெடிக்குப்பயோ, அதே மாதிரி தான் பொங்கலுக்கு கரும்பு சக்கை…!

ArulrajArun

மாட்டு பொங்கல் அன்னைக்கு Happy Birthday ன்னு ஒருத்தன் எல்லாத்துக்கும் wish பண்ணிட்டு வருவான் அவனை பார்த்தீங்கன்னா ஓங்கி ஒரே அடி .

ச ப் பா ணி

தை மாதம் 30 நாள் இருக்கிறது.. – ஓ.பன்னீர் செல்வம்.
வழி பிறக்க அல்ல
வழிக்கு வர 30 நாள் இருக்கு

Mannar & company

சம்பளத்துடன் பொங்கலுக்கு லீவு கொடுப்பதுதான்
“கரும்பு தின்ன கூலி” போலிருக்கு!

டிங் டாங்

கடன் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னேன்
தினமும் யோகா செய்யுங்கள் எல்லாமே சரியாகிவிடும் என்று விட்டுப் போகிறார் நண்பர்

Sasikumar J

~ ஏன் ப்ரோ பொங்கல் அன்னைக்கு கூட ஏதோ உப்புமா பண்ண மாதிரி சோகமா இருக்கீங்க…!
~ எங்க வீட்ல இன்னைக்கு ரவா பொங்கல் ப்ரோ…!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share