இன்னிக்கு நம்ம நண்பர் கூட டீ கடைக்கு போயிருந்தேன்…
அங்கிருந்த நியூஸ் பேப்பர் எடுத்து படிச்சு பார்த்தா, எல்லா பேப்பர்லையும் முதல் பக்கம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்ட அறிவிப்பு செய்திதான் இருந்தது.
பரவாயில்லை… அரசு ஊழியர்களின் 20 வருச போராட்டம் முடிவுக்கு வந்துருச்சுனு நண்பர்கிட்ட சொன்னேன்…
இதை கேட்ட அவரு, அப்படியே அந்த பொங்கல் பணமும் போட்டுவிட்டாங்கனா என்னுடைய மன குமுறலும் முடிவுக்கு வரும்னு சொல்றாரு… பார்ப்போம்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

mohanram.ko
அரசு ஊழியர்கள் நவ்-இப்ப நான் எதையாவது வாங்கி ஆகணுமே,… இந்த ரோடு என்ன விலைன்னு கேளு

ArulrajArun
தொடர்ந்து போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் நம்பிக்கை வார்த்தை -செய்தி
பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து அறிவிப்பை முதல்வர் தற்போது அறிவித்து இருக்கிறார் அடுத்து இடைநிலை ஆசிரியர் கோரிக்கைக்கு நிச்சயம் செவிசாய்பார் ன்னு கொஞ்ச நாள்ல செய்தி வரும் பாருங்க

mohanram.ko
சீனியர் அரசியல்வாதிகள் – நமக்கு ஒரு ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கிறாங்களா பாரு ….. கல்நெஞ்சக்காரங்க

ச ப் பா ணி
பணம் நிம்மதி தரும்
பேங்க் பேலன்ஸ் நம்பிக்கை தரும்

Mannar & company
ஓசிக் காலண்டர்களில் வர்ற கடவுள்களை விட,
ஓசில காலண்டர் தர்ற கடைக்காரர்கள் கடவுளாக தெரிகிறார்கள்!

டிங் டாங்
“இன்னும் ஒரு அரை மணி நேரம் மட்டும் வேலை செஞ்சுட்டுப் போப்பா” என்பது உழைப்புச் சுரண்டலின் ஆரம்பம்

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
விளக்கம் கொடுத்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
அவர்கள் விரும்பியதையே அவர்கள் கேட்க நினைப்பார்கள்..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அந்த ஐஸ்க்ரீம் கடை இன்டர்வியூல நீ சொன்ன ஒரு பதிலால உனக்கு வேலைல கிடைக்காம போச்சா? என்ன மாப்ள சொல்ற..?
ஞாயித்துகிழமை லீவு வேணும்ன்றதை, ‘I’ll not work on Sundaes..’ ன்னு இங்கிலீஸ்ல சொன்னேன்.. இதுல என்ன தப்பு இருக்கு மாமா..?

மன்மத பாய்
“திரும்ப போற ஐடியாவே இல்ல”
~எங்க?..
கரூர் க்கு..

லாக் ஆஃப்
