அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன் பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதையொட்டி பிரம்மாண்ட ஆடியோ லான்ச் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெற்றது. இது, நாளை ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தசூழலில் ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லரை தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்சன்ஸ் இன்று (ஜனவரி 3) வெளியிட்டுள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ ட்ரெய்லர், விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், வசனங்கள் மற்றும் அனிருத் ரவிச்சந்தரின் பின்னணி இசையுடன் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் தளபதி வெற்றிக் கொண்டான் என்று ட்ரெய்லரில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘மக்களுக்கு நல்லது பண்ண, அரசியலுக்கு வாங்கடானு சொன்ன, கொள்ளையடிக்க வர்றீங்க’, ‘மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க. இப்போ கொன்னா கடவுள் ஆக்கிடுவாங்க’, ‘திரும்பி போற ஐடியாவே இல்ல, ஐ ஆம் கம்மிங் போன்ற வசனங்கள் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளன.
மமிதா பைஜூ விஜய்யின் மகளாக நடித்திருக்கிறார்… தவெக நிர்வாகியான ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜூம் இந்த ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளார்.
பட்த்தின் ட்ரெய்லர் வெளியாகி அரை மணி நேரத்தில் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
