இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ், ட்வீட்களை அப்டேட் குமாரில் பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

ச ப் பா ணி
உனக்கு மேனேஜர் எப்படி இருந்தா பிடிக்கும்? லீவு போட்டால் பிடிக்கும்
பளார்

mohanram.ko
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறுவது ஏனோ?
அது தான்டா heart transplantation

கோழியின் கிறுக்கல்!
தோசையெல்லாம் தீய்ந்து போயிருந்தால் கோபம் என்றிறக,
ஒன்று தீய்ந்தும், மற்றொன்று வேகாமலும் இருந்தால் கடுங்கோபம் என்றறிக!!

ச ப் பா ணி
ப்ரிட்ஜில் வைத்த மாவுக்கு
past food என்று பெயர்

Writer SJB
சண்டையில் வாயை முதலில் மூடுபவன் கோழை அல்ல பக்குவப்பட்ட மனிதன்..!

திருச்சி கார்த்திகேயன்
தூக்கம் வராதபோது
கவிதை
கவிதை வராதபோது
அழுகை
அழுகை வராதபோது
தூக்கம்
ஏதோ ஒன்று வந்துவிடுகிறது,
எவருமற்ற இந்த இரவில்
எனக்குத் துணையாக

Mannar & company
காலையில ஓரு அஞ்சு நிமிஷம் தாமதமா எழுந்திருக்கலாம்னு நினைக்கிறது,
ஒரு முழு நாளையே தள்ளி வைத்துவிடும்!

Sasikumar J
உன் சிந்தனையும், செயலும் சரியாக இருந்தால்; நீ வைக்கும் குறி தப்பாது யார் தடையாக குறுக்கே வந்தாலும்…!

Writer SJB
கணவனும் மனைவியும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வரை தான் அந்த உறவுக்கு உயிர் இருக்கும்
இருவரும் அமைதியாகிவிட்டால் அந்த உறவுக்கு உயிர் இருக்காது..!

ச ப் பா ணி
குளிர்காலத்தில் கொசு கடிக்குதுனு.. ஃபேன் அஞ்சுல வச்சு தூங்குறான் பாரு..
அவந்தான் உண்மையான இளந்தாரிப்பய

லாக் ஆஃப்
