இன்னிக்கு டீ கடைல உட்கார்ந்து நானும் நண்பர்களும் டீ குடிச்சிட்டு இருந்தோம்.
டீ சூட்டை விட தமிழக அரசியலின் சூடுதான் அதிகமா இருக்குதுனு நண்பர்கிட்ட சொன்னேன்.
ஆமாம்… அதிமுகவில் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தத பத்திதான் பேசிட்டு இருந்தோம்.
அப்ப நம்ம நண்பரு, தேர்தல்ல நின்னு ஜெயிச்சு பெற்ற எம்.எல்.ஏ பதவிய செங்கோட்டையன், மனோஜ் பாண்டியன் எல்லாம் சாதாரணமா ராஜினாமா பன்றாங்கனு சொன்னாரு.
அதுக்கு இன்னொருத்தரு, இன்னும் தேர்தலுக்கு 4,5 மாசம் தான் இருக்கு… இப்ப ராஜினாமா பன்னா என்ன பன்னலனா என்ன? வாங்க நம்ம பொழப்ப பாப்போம்னு ஆபிஸுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ArulrajArun
கோபி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
-2026 சட்ட மன்ற தேர்தல் வருவதை உணர்கிறான் வீரன்

ச ப் பா ணி
இருக்கிறவன் வீட்ல சி.சி.டி.வி இருக்கும்;
இல்லாதவன் வீட்ல நாய் இருக்கும்

ArulrajArun
ஏண்ணே அவனை அடிச்சீங்க.
பின்ன என்னப்பா கையில காசு இல்லாம ரொம்ப சிரமமா இருக்குன்னு சொன்னா , G Pay ல இருக்க காசை எடுத்து செலவு பண்ண வேண்டி தானே ன்னு சொல்றான் பா

iQKUBAL
My official life to personal life :~
டேய்.. நான் கூட பரவால்லடா.. ஆனா நீ..

Writer SJB
வாழ்க்கை காலைல ஜம்முன்னு ஆரம்பிக்குது
மதியம் கம்முன்னு போகுது
இரவு உம்முன்னு முடியுது..!

Mannar & company
வாரத்தின் நடுவில் வரும் புதன்கிழமை என்பது நல்ல விறுவிறுப்பாக போகும் சினிமாவில் வரும் Interval மாதிரி..
மீதிப் படம் நல்லா இருக்குமா என்பது மாதிரி மீதி நாட்களும் நல்லா இருக்குமா என்று எதிர்ப்பார்க்கிறோம்!

ச ப் பா ணி
புது வருசம் வருதோ இல்லையோ..
புது வருச ராசிபலன் மட்டும் கரெக்டா வந்துடுது

mohanram.ko
தலையை பார்த்தே, ஒரு முடி கீழே விழுந்தா கூட ஈசியா கண்டுபிடிச்சிடுவோம்…
வெள்ளை டைல்ஸ் தரை இருந்தா, அதுல பார்த்தே கண்டு பிடிச்சிடுவோம்….

பாக்டீரியா
அதிமுகவ விட்டு செங்கோட்டையன் போனது அதிமுகவுக்கு பின்னடைவு இல்லயாம்..
திமுகவுக்கு தான் பின்னடைவாம் பிரண்ட்ஸ்

Writer SJB
Wi-Fi பாஸ்வேர்ட் தெரிஞ்சா போதும் ஈசியா கனெக்ட் ஆயிடலாம்,,
ஆனா, Wife கூட கனெக்ட் ஆகும் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்க உனக்கு ஒரு ஆயுளே தேவைப்படும்..!

லாக் ஆஃப்
