இன்னிக்கு ஆபீஸ்ல ஒரே டென்சன்… தலைவலி வேற வந்துடுச்சு… சாயங்காலமா வீட்டுக்கு போய் பொண்டாடிக்கிட்ட ஒரு டீ கேட்டேன்… அதுக்கு அவ அந்த டீ பாத்திரத்த கழுவி தாங்க போட்டுத் தர்றேனு சொல்றா…
இதுக்கு தலைவலியே பரவாயில்லனு போய் படுத்துட்டேன்.
இன்னிக்கு ஆண்கள் தினமாம்…
நீங்கள் அப்டேட்ஸ் பாருங்க
balebalu
பீகார் மாதிரி 10000 எல்லாம் கூட தர வேண்டாம் தமிழ்நாடு பூரா இந்த தெருநாய் , மாடு ரோட்டுல சுத்துற பிரச்சனையை சரி பண்ணாலே போதும் ஓட்டு விழும்

Sasikumar J
கடன் வாங்கி கப்பல்ல போறதுக்கு பதிலா, இருக்கிற காச வச்சு பரிசல்ல போகிறது தான் பக்குவம்…!

ச ப் பா ணி
உணவு, உடை, உறைவிடம்,
“சி டைப் சார்ஜர்”

Mannar & company
போதுமான மக்கள் தொகை இல்லாததால் கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் கிடையாது!
–மத்திய அரசு
நல்லவேளை எங்க ஊருக்கெல்லாம் மெட்ரோ ரயில் வரல.. ஏற்கனவே பாதாள சாக்கடைக்கு தோண்டிய ரோடே வருசக்கணக்கில் அப்படியே கிடக்கு இதுல மெட்ரோ ரயில் வந்தா அவ்வளவுதான்!

குழந்தை செல்வா
2025ல் நாய்க்கடியால் 5.25 லட்சம் பேர் பாதிப்பு – செய்தி
கொரோனா போல நாய் கடிக்கும் எல்லாருக்கும் தற்காப்புக்காக ஊசி போட்டுவிடலாம்..

மயக்குநன்
திமுக அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்கள், அதிமுகவில் இருந்து போனவர்கள்தான்!- ஆர்.பி.உதயகுமார்.
அதிமுகவே திமுகவில் இருந்து போனதுதானே..?!

Writer SJB✒️
என்ன அப்பத்தா சமையல் வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சா ஜாலியா வெளிய வந்து உக்காந்துட்டீங்க?
இன்னைக்கு ஏதோ ஆண்கள் தினமாம் அதனால அவங்கள சமைக்க சொல்லிட்டு வந்துட்டோம்..!

லாக் ஆஃப்
