இன்னிக்கு நானும் என் ப்ரண்ட்ஸும் ஆபிஸ்ல இருந்து ஒன்னா கிளம்பினோம். அதுல ஒருத்தரு வீட்டுல ஃவைப் புரிஞ்சிக்கவே மாட்டிக்கிறாங்கனு ஃபீல் பன்னிக்கிட்டே வந்தாரு…
அப்ப நான் விடுங்க நண்பா, ‘கேரளாவுல திருமண உறவு பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் செய்யும் பிரபல தம்பதியிடையே பிரச்னையாம்… தனது தலையில் டி.வி செட் ஆப் பாக்ஸ் கொண்டு தாக்கியதாக கணவர் மீது மனைவி புகார் சொல்லிருக்காங்க… எல்லாம் சரியா போய்டும்னு” ஆறுதல் சொன்னேன்
இத கேட்ட இன்னொரு நண்பர், ‘பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டரக்கே பைத்தியம் பிடிச்சுதுனா, அவரு எந்த பைத்தியகார டாக்டர போய் பார்ப்பாருனு’ டங் ட்விஸ்ட்டரா பேசிட்டு போறாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ArulrajArun
நம்முடைய மணி பர்ஸில் பத்து ரூபா கூட இல்லேன்னு நினைக்கும்போது தான் பணத்தோட அருமை தெரியும்னு தானே நினைக்கிறீங்க..
அதான் இல்ல G Pay வோட அருமை தெரியும்
ச ப் பா ணி
சனியனே குளிச்சு தொலை,
இன்னிக்கு குழந்தைகள் தினமாம்
-ரியல் லைப்

ArulrajArun
வட மாநிலத்தில் பாஜக வெற்றி பெறுவதும்
தென் மாநிலங்களில் பாஜக தோல்வி அடைவதற்கும் நேரு தான் காரணம்
-குழந்தைகள்தினம்

Writer SJB
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும், அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம்
தேர்தல் கமிஷ்னரையே சேரும்..!

ச ப் பா ணி
மற்றவர்கள் கண்ணுக்கு அழகாய்த் தெரிவது looking good
நமக்கே நாம் அழகாய் உணர்வது Feeling good

Mannar & company
பீகார் மக்கள் தற்போது: யாருக்கு ஓட்டு போட்டிங்க?
நாங்கள் பாஜகவுக்குதான் ஓட்டு போட்டோம்.
இப்ப எங்கே கிளம்பிட்டீங்க?
இப்போது எதிர்க்கட்சி ஆளும் தென்னிந்திய மாநிலங்களில் வேலை தேடி போறோம்.
ச ப் பா ணி
சமாளிப்பு இரண்டே வகைதான்..
ஒன்னு, உண்மையை மறைக்கணும் இன்னொன்னு பொய்யை மறைக்கணும்

Writer SJB
ஓடி விளையாடு பாப்பா
நீ பனையூரில் ஒளிந்திருக்கலாகாது பாப்பா..!
லாக் ஆஃப்
