இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நண்பர் ஒருத்தர் சோகமா உட்கார்ந்திருந்தாரு. அவருகிட்ட என்னாச்சுன்னு கேட்டேன்.
அதுக்கு அவரு… ”அந்த கேட் கீப்பர் ரயில்வே கேட்டை மூடாம விட்டதால சின்னப்புள்ளங்க உயிரு போயிருக்கு… அத நெனச்சி தான் இன்னும் மனசு கேக்க மாட்டேங்குது… பாவம் அந்த புள்ளைங்க…”னு வருத்தப்பட்டாரு. அதோட, இது தான் உண்மைனு தெரிஞ்சும், அந்த ரயில்வேக்காரன் வேன் டிரைவர் மேல் தப்புனு சொல்லி அறிக்கை விட்டாங்க பாரு… பொறுக்கவே முடியல.
கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 40 ரயில் விபத்துகள் நடந்துருக்கு. அதுல 300 பேருக்கு மேல இறந்துருக்காங்க.
முன்னாடி, டிரெயின்ல போறது தான் பயமா இருந்துச்சி… இப்போ தூரத்துல டிரெயின் சத்தம் கேட்டாலே பயம் வருது… நாளைக்கு வேற திருப்பதி போறேன்… பத்திரமா போயிட்டு வரனும்னு சொல்லிட்டு போறாரு.

ச ப் பா ணி
Inconvenience today
For better tomorrow
#மெட்ரோ வேலை வாசகங்கள்
வாழ்க்கைக்கும் பொருந்தும்
Writer SJB
என்ன பெரிய காதல் சுகம்?
பல்லிடுக்கில் மாட்டிய உணவுத்துகளை பல் குச்சியில் எடுக்கும் போது கிடைக்கும் சுகத்தை விடவா அது பெருசு,,???

Mannar & company™
கடன் வாங்கி சமாளிக்கிறவங்களை விட,
சமாளிச்சிக்கலாம்னு கடன் வாங்குபவர்களே அதிகம்!
ச ப் பா ணி
ஒனக்கென்னப்பா ஜாலியான வாழ்க்கை
இங்க வா என்னோட ஜாலியான வாழ்க்கைய நீ வச்சுக்க
ஒன்னோட கஷ்டமான வாழ்க்கைய எங்கிட்ட குடு

கோழியின் கிறுக்கல்!!
சித் ஸ்ரீராமின் திரைப்பாடல்கள் போல வாழ்க்கையை எதிர்பார்த்தால்,
ஏனோ அவரின் மேடை கச்சேரி போலத்தான் வாழ்க்கை அமைகின்றது!!

நெல்லை அண்ணாச்சி
அறநிலையத்துறை நிதியில் பள்ளி, கல்லூரிகள் கட்டுவது வேண்டாத செயல்…EPS
# முழுவதுமாக மாறிய .
” எடப்பாடிஜி “…

Manvasam lavanya
வரதட்சணை எதிர்பாக்கமா மனச யாருங்க… இது ஆண்களுக்கு மட்டும் இல்ல… பெண்களுக்கும் தா… வரதசட்சனை ஆள பாதிக்க படுவது பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் தான்…
