டீ குடிச்சிக்கிட்டு மரத்தடியில நிக்கும்போது பக்கத்துல நின்னு டீ குடிச்சுக்கிட்டிருந்த அண்ணனுக்கு ஒரு போன் வந்துச்சு, டீயை குடிச்சுக்கிட்டே, ‘இதோ உடனே புல் புல் பறவை மேல ஏறி வந்துடுறேன், அங்கயே வெயிட் பண்ணுங்க’னு சீரியசா சொன்னாரு.
என்னது புல் புல் பறவையா அப்படின்னா என்னனு கேட்டேன். தம்பி நீ தமிழ்நாட்லதான படிச்சே… கர்நாடகாவுல ஸ்கூல் படிச்சிருந்தா தெரியும்னு சொல்லிட்டு பக்கத்துல இருந்த இன்னொரு மரத்தடிக்கு போயிட்டாரு.
அவர் புல் புல் பறவை மேல ஏறி போறாரா இல்லியானு பாத்துக்கிட்டு நிக்கிறதுக்கு நாம என்ன வெட்டிப் பயலா? நான் என் வண்டிய எடுத்துக்கிட்டு ஆபீஸ் வந்துட்டேன். நீங்க உங்க வேலைய பாருங்க அப்படியே அப்டேட்ஸ் பாருங்க.
amudu
அதிமுக இணைப்பை வலியுறுத்தி மாவட்டம் தோறும் புரட்சி பயணம். -ஓ.பி.எஸ்.
நீங்க சொல்ற அதிமுக, சசிகலா, தினகரன் தானே.

சரவணன். ????
“சீனாவில் இருந்து கொடிகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன?” – சபாநாயகர் அப்பாவு
ஜி ~ ஏன் ன்னா அப்பதான் அவன் சண்டைக்கு வராம என்னை நிம்மதியா ஆட்சியில் இருக்க விடுவான்..

கடைநிலை ஊழியன்
நா கூட வேலைக்கு போனதுக்கு அப்புறம் கஷ்டப்பட தேவையில்ல னு நெனச்சேன்..
அப்பறம் தான் தெரிஞ்சது வேல பாக்குறதே ரொம்ப கஷ்டம் னு.

ச ப் பா ணி
எல்லா சாலைகளும்
Take diversion ஐ நோக்கியே
Smart city
கோழியின் கிறுக்கல்

சரவணன். ????
விதிமுறைகளை மீறி நொய்டாவில் 9 ஆண்டுகளாக கட்டப்பட்ட 32 மாடி கட்டடம் 9 நொடிகளில் தகர்க்கப்பட்டது!
ஏம்பா காங்கிரஸ் காரங்களே.. பாஜகவை தோற்கடிக்க முடியாதுன்னு முயற்சியை ‘கை’ விட்டுடாதீங்க…

ArulrajArun
“தொண்டர்கள் நம் பக்கம்.. குண்டர்கள் அவர்கள் பக்கம்” – தொண்டர்களிடையே ஓ.பி.எஸ் பேச்சு
ஆட்சி வந்ததுக்கு அப்புறம் டெண்டர் எல்லாம் நம்ம பக்கம் தானே பாஸ்

மயக்குநன்
துரோக எண்ணம் கொண்டவர்கள் நல்ல விஷயத்துக்கு ஒத்துவர மாட்டார்கள்!- டிடிவி தினகரன்.
ஆமா பாஸ்… தனிக்கட்சி தொடங்கிடுவாங்க..!

ஊர்க்காவலன்
வாழுறதுக்கு காசு பணமா முக்கியம் இல்ல அன்புதான் முக்கியம்
சரி அப்டினா ஒரு பாத்தாயிரம் கடன் கொடு
கடன் கொடுக்குற அளவுக்கு நான் யாருகிட்டயும் அன்பு வைக்கிறது இல்லப்பா.

Mannar & company
ஒரு ஊர் வளர்ச்சி அடைஞ்சிடிச்சின்னு நம்ப வைக்கிறதுக்கு முதலில் வைக்கிற பேர்தான் “ஸ்மார்ட் சிட்டி”
-SmartCity
மயக்குநன்
‘எந்த சூழ்நிலையிலும்’ ஓபிஎஸ்ஸை அதிமுகவில் ஏற்க முடியாது!- கே.பி.முனுசாமி.
இப்ப அதிமுகவே ‘நொந்த’ சூழ்நிலையில் இல்ல இருக்கு..?!
லாக் ஆப்
