குறுகிய காலத்தில் விஜய், கமல், ரஜினி என உச்சநட்சத்திரங்களின் படங்களை அடுத்தடுத்து இயக்கி திரையுலகில் முக்கிய இயக்குநராக உருவெடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். managaram sri video goes viral… is this real
அவர் இயக்கத்தில் முதன்முறையாக கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாநகரம். இந்த படத்தில் நடிகர்களாக ஸ்ரீ மற்றும் சந்தீப் கிஷன் கதாநாயகர்களாக நடித்திருந்தனர்.

சந்தீப் கிஷன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நிலையில், ஶ்ரீ கடந்த 13 ஆண்டுகளில் 6 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அதில் அறிமுகப் படமான வழக்கு எண் 18/9, வில் அம்பு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று என அனைத்து படங்களும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றன.

இந்த நிலையில் தமிழ் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ஸ்ரீயின் கைவசம் தற்போது எந்த படங்களும் இல்லை. managaram sri video goes viral… is this real
இந்த நிலையில், அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் மாநகரம் படத்தில் நடித்த ஸ்ரீ-யா இது என அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர்.
மேலும் இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்ரீராம் நடராஜன் என்ற அக்கெளண்டில் இருந்து தான் புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகி வருகின்றன. managaram sri video goes viral… is this real
இதனையடுத்து சிலர் இது நடிகர் ஸ்ரீ இல்லை என்றும், இது அவரைப் போலவே தோற்றம் கொண்ட இன்னொரு நபரின் அக்கெளண்ட் என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.