தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்-க்கு இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன், நாமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தவெகவின் தலைவரான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நேற்று டிசம்பர் 27-ந் தேதி நடைபெற்றது.
மலேசியாவில் பிரம்மாண்டமாக இவ்விழா நடைபெற்ற போது, இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபகசே, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்சே, “ நான் மிகவும் விரும்பக் கூடிய கலைஞர்களில் விஜய்யும் ஒருவர். திரைத்துறையில் விஜய் பயணமும் இந்த வெள்ளித்திரைக்கு அவர் வழங்கிய பங்களிப்பும் சிறப்புக்குரியவை; மறக்க முடியாதவை. விஜய் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறார். அப்போது சினிமா நிச்சயமாக விஜய்யின் இருப்பை இழக்கும். விஜய் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இனி நடைபெறும் அனைத்திலும் விஜய் வெற்றி பெற வாழ்த்துகள்” என நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
