மதுரை முருகன் மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Murugan Conference
மதுரை முருகன் மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி அரசியல் கருத்துகள் பேசப்பட்டன. இது தொடர்பாக மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவை மீறி மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.