லாக் அப் மரணம் : அஜித்குமார் தாய்க்கு விஜய் நேரில் ஆறுதல்!

Published On:

| By Kavi

போலீஸ் தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமார் வீட்டிற்கு சென்று அவரது தாய்க்கு விஜய் ஆறுதல் கூறினார். Vijay consoles Ajith Kumar mother

திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தார். அவரது உடலில் மொத்தம் 44 காயங்கள் இருந்ததும், ஒரு இடம் விடாமல் போலீசார் அடித்திருப்பதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

இந்தநிலையில் அஜித்குமாரின் தாயாரை சந்தித்து அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல் கூறி வரும் நிலையில், இன்று மாலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அஜித்குமாரின் வீட்டுக்கு கிளம்பினார்.

இதுகுறித்து மின்னம்பலத்தில் அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல கிளம்பிய விஜய் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன்படி அஜித்குமாரின் தாயாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் விஜய். அஜித்குமாருக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தாய் மற்றும் தம்பியிடம் கேட்டறிந்தார். அஜித்குமாரின் தாய் மாலதியின் கையை பிடித்து ஆறுதல் கூறினார். Vijay consoles Ajith Kumar mother

முன்னதாக அவர்களது வீட்டில் இருந்த அஜித்குமாரின் புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அஜித்தின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share