தண்ணீர் கலந்த டீசல் போட்டதால் தனது கார் பழுதடைந்ததால் ஆத்திரம் அடைந்த மாகாபா ஆனந்த இனி டீசலையும் மக்களே தயாரிக்க வேண்டுமா என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்த் திரைப்பட நடகராகவும், பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருபவர் மாகாபா ஆனந்த்.
இவர் தனது காருக்கு பிரபல பங்கில் வழக்கம் போல் டீசல் போட்டுள்ளார். ஆனால் டீசலில் தண்ணீர் கலந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது சொகுசு கார் பழுதடைந்தது. இதனால் அவர் தனது காருக்கு ரூ.3 லட்சம் வரை செலவு செய்யும் நிலை ஏற்பட்டதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
தண்ணீர் கலந்த டீசல் போடப்பட்டதாற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆனால் ஆதாரத்தோடு நிரூபித்ததும், கோர்ட்க்கு போய் விட வேண்டாம் என கூறி ரூ.80,000 வழங்குவதாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் பேரம் பேசுகிறார்கள்.
உங்களை நம்பித்தானே பெட்ரோல் டீசல் போட வருகிறோம். ஆனால் இப்படி செய்தால் இனி டீசலையும் மக்களே தயாரிக்க வேண்டுமா? இந்த பெட்ரோல் பங்க் மேல் இருந்த நம்பிக்கையே போய் விட்டது என்று அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
