தாகம் தணிப்பது, உடலின் நீரேற்றத்துக்கு என்று பொதுவாக காரணங்களைச் சொன்னாலும் உடலின் உள்ளுறுப்புகள் இயங்குவதற்கு தண்ணீர் தேவை. இதயம், சிறுநீரகம், நுரையீரல், தசை, கடினமாக இருப்பதாக நாம் கருதும் எலும்புகளுக்குள்ளும் நீர் உண்டு. அந்தளவு நம் உடல் இயங்குவதற்கான பிரதான ஆதாரங்களில் ஒன்றாக நீர் உள்ளது.
‘நீரின்றி அமையாது உலகு‘ என்பது போல நீரின்றி நம் உடலும் இயங்காது. நீரைத் தவிர்த்தால் ஒருவரின் உடல்வாகுக்கு ஏற்ப சில மணி நேரங்களிலோ, ஓரிரு நாள்களிலோ பிரச்னைகளைச் சந்திப்பார்கள். தண்ணீரே குடிக்காமல் இருந்தால் ஆரோக்கியமான மனிதனின் உடல் 3 முதல் 5 நாள்களில் இயக்கத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும்.
இந்த நிலையில், ஒருநாளில் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது பொதுவான அறிவுரை. இந்த வழிகாட்டுதலை அப்படியே எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் தண்ணீரின் தேவை என்பது ஒரு தனிநபரின் உடல்நிலை, வாழ்க்கை முறை, வேலையின் தன்மை, சீதோஷ்ணம், வயது, மனநிலை அல்லது உளவியல்ரீதியான பாதிப்புகள் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும்.
தண்ணீரில் பல சத்துகள் அடங்கியிருக்கின்றன. தண்ணீரை மட்டுமே பருகியும் குறிப்பிட்ட நாட்கள் வரை உயிர் வாழலாம் என்பதும் உண்மைதான். ஆனால், அதற்கெல்லாம் பயிற்சிகள் வேண்டும். எல்லோராலும் முடியாது. மூச்சுப்பயிற்சி, யோகப்பயிற்சி போன்றவற்றை தொடர்ச்சியாகச் செய்கிறவர்களுக்கு அது சாத்தியமாகலாம். சாதாரண வாழ்வில் இருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லதல்ல. அதனால் எதிர்பாராத மோசமான விளைவுகளும் உண்டாகலாம். எனவே உங்கள் உடல் தேவைக்கேற்ப தண்ணீர் அருந்துவது அவசியம்” என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மோத்தி லட்டு!
கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ்… ’கேப்டன்’களை அகற்றிய அணிகள் : காரணம் என்ன?
கோவை நகர போலீசை ரகசியமாக எச்சரித்த என்.ஐ.ஏ… பின்னணியில் கார் வெடிகுண்டு?