தர்மபுரி: கடைசி வரை டஃப் கொடுத்து வெற்றி பெற்ற திமுக!

Published On:

| By Kavi

தர்மபுரி மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.மணி வெற்றி பெற்றார்.

தர்மபுரி மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மணி, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி, அதிமுக சார்பில் அசோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்ட நிலையில் காலை முதல் சௌமியா அன்புமணி முன்னிலை வகித்து வந்தார். அவருக்கு வெற்றி வாய்ப்பு உருவாகும் வகையில் முன்னிலை நிலவரம் வெளியாகி வந்த நிலையில் பிற்பகலில் திடீர் ட்விஸ்டாக திமுக வேட்பாளர் மணி முன்னிலையில் இருந்து வந்தார்.

திமுகவும் பாமகவும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்த நிலையில், இந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மற்ற தொகுதிகளை காட்டிலும் அதிகமாகவே இருந்தது.

இறுதியில், 21,300 வாக்கு வித்தியாசத்தில், 4,32,667 வாக்குகளைப் பெற்று திமுக வேட்பாளர் மணி வெற்றி பெற்றார்.சௌமியா அன்புமணி 4,11,367 வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்தார்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோகன், 2,936,29  வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி அபிநயா 65,381 வாக்குகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர்.

திமுக சார்பில் வெற்றி பெற்ற மணி, மற்ற வேட்பாளர்களை காட்டிலும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.2019 தேர்தலில் தர்மபுரி தொகுதியில் இருந்து செந்தில்குமார் போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அன்புமணி ராமதாசை காட்டிலும் 70,753 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share