அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘லாக் டவுன்’.
லாக் டவுன் காலகட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட உணர்வு மற்றும் உளவியல் ரீதியிலான தாக்கங்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இப்படம், சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பாளராக சாபு ஜோசப், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன் – சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு.
கோவாவில் நடைபெற்று வரும் 56 ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சர்வதேச பார்வையாளர்களுக்கான பிரத்யேக திரையிடலில் ‘லாக் டவுன்’ திரையிடப்பட்டது. அந்த அரங்கம் முழுவதும் பார்வையாளர்களால் நிரம்பி இருந்தது.
இப்படத்தை பார்வையிட்ட சர்வதேச பார்வையாளர்கள்- விருந்தினர்கள்- விழா குழுவினர்- திரை ஆர்வலர்கள்- என அனைவரும் படத்திற்கும், படக் குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்தனர். வரும் டிசம்பர் 5 இல் திரையரங்கில் வெளியாகவுள்ளது.
பல படங்களால் லைக்கா நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை லாக் டவுன் UP செய்யுமா?
— ராஜ திருமகன்
