அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 50 சதவீதம் வரியை கடந்த வாரம் அதிரடியாக அறிவித்தார்.
இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி, இந்தியா–அமெரிக்க உறவுகளைப் பதற்றப்படுத்தியுள்ளது.
டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்களான மெக்டொனால்ட்ஸ், கோகோ கோலா, அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு இந்தியாவில் நாம் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்களும் மற்றும் சில தொழில் அதிபர்கள், அமெரிக்காவின் புதிய அதிக வரி விதிப்பை கண்டித்து இந்த அழைப்புகளை விடுத்துள்ளனர்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, அமெரிக்க நிறுவனங்களுக்கு மிக முக்கியமான சந்தையாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து 7லட்சம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டுகிறது.
இந்தியாவில் வாட்ஸ் அப்பின் பயனர்கள் உலகில் அதிகம். டொமினோஸ் பீட்சா இங்கு அதிகமான கிளைகளை நடத்துகிறது.
பெப்சி, கோகோ கோலா போன்ற பானங்கள் கடைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஆப்பிள் ஸ்டோர் புதியதாக திறக்கும் போதும், ஸ்டார்பக்ஸ் சலுகை தரும் போதும் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதையும் காண முடியும்.
விற்பனைக்கு உடனடி பாதிப்பு இல்லாவிட்டாலும், “உள்ளூர் பொருட்களை வாங்குங்கள்” என்ற கோஷம் இணையத்திலும் நேரடியாகவும் பரவி வருகிறது.
டிரைவ் யூ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம் ஷாஸ்திரி, “சீனாவைப் போல இந்தியாவுக்கும் தன்னுடைய சொந்த ட்விட்டர், கூகுள், யூடியூப், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவை இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
உள்ளூர்–வெளிநாட்டு போட்டி இந்தியாவில் உள்ளூர் காப்பி கடைகள் ஸ்டார்பக்ஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடுகின்றன.
ஆனால், இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு சந்தைகளில் விரிவடைவது சிரமமாக இருக்கிறது.
அதே சமயம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ் போன்ற இந்திய ஐடி நிறுவனங்கள் உலகளாவிய மென்பொருள் சேவைகளில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளன.
தற்போதைய தேசபக்தி கோஷங்கள் அமெரிக்க பிராண்டுகளின் பிரபலத்தைக் குறைக்குமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், இந்த வரி விவகாரம், இந்தியா–அமெரிக்கா இடையிலான வணிக உறவுக்கு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.