நிமோனியா வகை தொற்று பரவுவதால் ஆஸ்திரேலியா சுகாதாரத் துறை அவசரநிலையை அறிவித்துள்ளது. Legionnaires spread health warning
2019ல் சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசால் பல லட்சம் பேர் உயிரிழந்தனர். உலக பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது.
இந்த பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உலக பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் புதிய தொற்று பரவ தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா சிட்னியில் Legionnaires என்ற நிமோனியா வகை நோய் பரவுகிறது. இந்த நோயின் அறிகுறிகளுடன் குறைந்தது ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 10 நாட்களில் சிட்னியில் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளதால், அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய சிட்னி சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
நோய் தொற்று பரவியதற்கான காரணம் குறித்து கண்டறியும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நோய் பாக்டீரியாக்கல் மனித உடலுக்குள் சென்ற 2 முதல் 10 நாட்களுக்குள் தலைவலி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை வெளிகாட்டும்.
காற்றில் பரவும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 முதல் 10 சதவிகிதம் வரை உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டு அதற்கு முறையான சிகிச்சையளிக்கவில்லை என்றால் 80 சதவிகிதம் வரை உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ள ஆஸ்திரேலியா சுகாதாரத் துறை சிட்டினியை தலைமையிடமாக கொண்டுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அவசர நிலையை பிறப்பித்துள்ளது. Legionnaires spread health warning