டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் (JNU)-வில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் (JNU Student Union Elections) இடதுசாரி இயக்கங்களின் மாணவர்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளனர். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி படுதோல்வி அடைந்துள்ளது.
டெல்லி JNU மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் மாணவர்கள் “Left Unity Alliance” என்ற பெயரில் போட்டியிட்டனர்.
- All India Students’ Association (AISA)
- Students’ Federation of India (SFI)
- Democratic Students’ Front (DSF)
ஆகிய மாணவர் அமைப்புகள் இந்த கூட்டமைப்பில் இடம் பெற்றிருந்தன.
JNU மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி மாணவர்களுக்கும் பாஜகவின் ஏபிவிபி மாணவர்களுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது.

இந்த தேர்தலில் தலைவர் உள்ளிட்ட பதவிகளை இடதுசாரி மாணவர்கள் கைப்பற்றி உள்ளனர்.

வெற்றி பெற்றவர்கள் விவரம்:
- தலைவர்: அதிதி மிஸ்ரா (AISA)
- துணைத் தலைவர்: கோபிகா (SFI)
- பொதுச்செயலாளர்: சுனில் யாதவ் (DSF)
- இணை செயலாளர்: டேனிஷ் அலி (AISA)
இதனையடுத்து டெல்லி JNU பல்கலைக் கழகத்தில் நள்ளிரவில் வெற்றி கொண்டாட்டங்கள் களைகட்டின.
