விஜய் பிறந்தநாள்… தலைவர்கள் வாழ்த்து!

Published On:

| By Selvam

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (ஜூன் 22) தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தவெக சார்பில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பல இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்களும் நடைபெறுகிறது.

இந்தநிலையில், பாமக தலைவர் அன்புமணி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். across party extended wishes to Vijay

பாமக தலைவர் அன்புமணி

தம்பி விஜய் 51-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட, நோயில்லா வாழ்வு பெற்று பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

விஜய்க்கு இனிய பிறந்தாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எல்லா வளமும் நலமும் பெற்று, நீண்ட ஆயுளுடன் மக்கள் நலப்பணியைத் தொடர வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்

இன்று பிறந்த நாள் காணும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக மக்கள் நலன் காக்கும் பணியாற்ற நல்ல உடல் நலத்துடன், நீடுடி வாழ தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய்க்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

விஜய்க்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் நீண்ட ஆயுளோடும் பூரண உடல்நலத்துடனும், மக்கள் பணியை தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

அன்பு சகோதரர் விஜய்க்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். திரைப்படத் துறையில் சாதித்ததைப் போல அரசியலில், மக்கள் சேவைப் பணிகளில் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share