சென்னை மாநகரில் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி விதித்திருந்த உரிமம் பெறுவதற்கான காலக்கெடு இன்று (டிசம்பர் 14) முடிவடைகிறது. நாய்களுக்கு உரிமம் பெறாத உரிமையாளர்களுக்கு நாளை முதல் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
தமிழகத்தில் நாய்கடி விவகாரம் பெரும் பிரச்சனையாகி வருகிறது. நடப்பாண்டில் மட்டும் 3.7 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாய் கடியால் 20 பேர் வரை உயிரிழந்தும் உள்ளனர்.
இதனையடுத்து நாய்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கியது சென்னை மாநகராட்சி. சென்னை மாநகராட்சியில் சுமார் 98,523 செல்லப் பிராணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், 56,378 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டு, மைக்ரோசிப்கள் பொருத்தப்பட்டன. இதனால் அனைத்து செல்லப் பிராணிகளுக்கும் உரிமம் பெறுவதை எளிதாக்கும் வகையில் , மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், அண்ணா நகர், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி உள்ளிட்ட மண்டலங்களில் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த முகாம்களில் செல்லப்பிராணி பதிவு, வெறிநாய் தடுப்பூசி மற்றும் மைக்ரோசிப் பொருத்துதல் போன்ற சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
நாய்களுக்கு உரிமம் பெற இன்றே கடைசி நாள். நாய்களுக்கு உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5,000 அபராதம் நாளை முதல் விதிக்கப்படும்.
இது தொடர்பாக இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கீழ்க்கண்ட இடங்களில் செல்லப்பிராணிகள் பதிவு செய்தல், வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

