கேரள சினிமா விருதுகள்: சிறந்த படம்?

Published On:

| By Balaji

கேரள மாநில அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

கேரள அரசின் சார்பில் 51-வது ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டு விருதுகள் குழுவின் தலைவராக சுஹாசினி மணிரத்னம் பணிபுரிந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலைத் தாண்டியும் இந்த ஆண்டு பல்வேறு விருதுகள் பிரிவுக்கு சுமார் 80 படங்கள் போட்டியிட்டன.

ADVERTISEMENT

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதுகள் பட்டியலின் முழுமையான விவரம் பின்வருமாறு:

சிறந்த நடிகர்: ஜெயசூர்யா (வெள்ளம்)

ADVERTISEMENT

சிறந்த நடிகை: அன்னா பென் (கப்பேலா)

சிறந்த திரைப்படம்: தி கிரேட் இந்தியன் கிச்சன் (இயக்குநர் ஜியோ பேபி)

ADVERTISEMENT

சிறந்த வெகுஜன / பிரபலமான திரைப்படம்: அய்யப்பனும் கோஷியும் (இயக்குநர் சச்சி)

சிறந்த இயக்குநர்: சித்தார்த் சிவா (என்னிவர்)

சிறந்த கதாசிரியர்: ஜியோ பேபி

சிறந்த அறிமுக இயக்குநர்: முகம்மத் முஸ்தஃப (கப்பேலா)

சிறந்த படத்தொகுப்பாளர்: மகேஷ் நாராயணன் (சி யூ ஸூன்)

சிறந்த இசையமைப்பாளர்: எம் ஜெயச்சந்திரன் (சூஃபியும் சுஜாதையும்)

சிறந்த பாடகர்: ஷபாஸ் அமான்

சிறந்த பாடகி: நித்யா மம்மென்

சிறந்த பாடலாசிரியர்: அன்வர் அலி

சிறந்த கலை இயக்குநர்: சந்தோஷ் ஜான்

சிறந்த பின்னணிக் குரல் / டப்பிங் கலைஞர்கள்: ஷோபி திலகன், ரியா சாய்ரா

பெண்களுக்கான விசேஷ விருது, திருநங்கை பிரிவு: நான்ஜியம்மா.

**-அம்பலவாணன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share