நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேற்று கரூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி கரூரில் உயரிழந்தவர்களுக்கு நேற்று இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் அலுவகம் அறிவித்துள்ளது.