கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.
6 குழந்தைகள், 16 பெணகள், 9ஆண்கள் என மொத்தம் 31 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்துள்ளனர்.
முதலில் 20 பேர் கூட்ட நெரிசலில் சிக்கியதாகவும், அவர்கள் மயக்கமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் உயிரிழப்பு அதிகரித்து வருவது கூட்டத்துக்கு சென்றவர்களின் குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பலரும் தங்கள் வீட்டிலிருந்து சென்றவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு வருவார்களா என அச்சத்திலேயே இருந்து வருகின்றனர்.